முதன்முறையாக காதலி குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி... இப்போது அவர் என் தோழி!

 
ராகுல்

 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது காதலி குறித்து முதல்முறையாகப் பொதுவெளியில் பேசியுள்ளார். தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான அனுபவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

சோனியா காந்தி எழுதிய ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (நவ. 16) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, தனது பெற்றோர் ராஜீவ் காந்தி - சோனியா காந்தி முதன்முதலில் சந்தித்துக்கொண்ட கேம்பிரிட்ஜில் உள்ள 'வர்சிட்டி' உணவகம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தார்.

தான் கேம்பிரிட்ஜில் படித்தபோது, பெற்றோரின் காதல் மலர்ந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது அப்போதைய காதலியை அந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார். அங்கு உணவக ஊழியரிடம் தனது பெற்றோர் சந்தித்த இடம் இதுதான் எனக் கூறியபோது, அவர்களையும் அந்த ஊழியர் அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரிவித்தார்.இதற்கிடையே, அந்தப் பெண் தற்போது எங்கே இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர் இப்போது எனது தோழி” என்று ராகுல் புன்னகையுடன் பதிலளித்தார்.