முதல்வர் விஜய் இல்லத்தில் ராகுல் காந்திக்கு மதிய விருந்து... மாலை தீவுத்திடலில் பிரம்மாண்ட கூட்டம்!

 
ராகுல் விஜய் விஜய்ராகுல் ராகுல்விஜய்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை தந்துள்ள நிலையில், நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் நடைபெறும் சிறப்பு மதிய விருந்தில் பங்கேற்கவுள்ளார்.

விமான நிலையம் வரும் ராகுல் காந்தி நேராக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் மதிய விருந்தில் கலந்துகொள்ளும் இரு தலைவர்களும், மாநில அரசியல் நிலவரங்கள், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்வரும் அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ராகுல்

தவெக - காங்கிரஸ் இடையேயான மாநில அளவிலான கூட்டணி உறவு பலப்பட்டு வரும் சூழலில், இரு தரப்பு முக்கிய நிர்வாகிகளும் இச்சந்திப்பின் போது உடனிருக்கின்றனர்.

மதிய விருந்துக்குப் பிறகு, மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.