இன்ஸ்டாகிராமில் சாதனை... ராகுல் காந்தியை முந்திய தவெக தலைவர் விஜய் !

 
இன்ஸ்டா

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சமூக வலைதளங்களில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவேகமாக உயர்ந்து உலக அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை தமிழக முதல்வர்  விஜய் முந்தியுள்ளார்.

இன்ஸ்டா

அரசியல் களத்தில் கால் பதித்த குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் இந்த மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல வைரலாகப் பரவின. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களும் ஆதரவாளர்களும் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

விஜய் ராகுல்

குறுகிய காலத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து ராகுல் காந்தியின் எண்ணிக்கையைக் கடந்து சாதனை படைத்துள்ளது.உலகளவில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட அரசியல் தலைவர்களின் பட்டியலில் விஜய் மிக வேக முன்னேற்றம் கண்டு வருகிறார். திரையுலகில் மட்டுமன்றி அரசியல் தளத்திலும் விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கை இந்தச் சாதனை உணர்த்துகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் இந்த புதிய மைல்கல்லைத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.