அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு.... அமலாக்கத்துறையினர் அதிரடி!

 
பொன்முடி

திமுகவுக்கு அடுத்த தலைவலியாக அமைச்சர் செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சர் சிக்குகிறார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வீட்டில்  இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது முறை எந்த இலாகாவும் ஒதுக்கப்படாமல் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கப்படுவார் என்று கவர்னருடன் மல்லுக்கட்டி வரும் திமுக தலைமைக்கு இப்போது புது தலைவலியாக இன்னொரு அமைச்சரு ரெய்டு நடவடிக்கையில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் திமுக துணை பொதுச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் இன்று காலை  முதல் திடீரென அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. 

அதே போன்று அமைச்சர் பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையின் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் தற்போது அமலாக்கத்தூறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் தேர்வு:  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ எனும் நிறுவனத்தில் சட்ட விரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போன்று ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55, 000 அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2008ல் திமுக ஆட்சியின் போது இந்த மோசடி வழக்கு நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பொன்முடி மாநில உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துக்ள் கடந்த 2020ல் அமலாக்கத் துறையினரால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Raid

கடந்த மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறையால் கைது செய்தனர். தற்போது மற்றுமொரு திமுக அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து ரெய்டு நடைப்பெற்று வருவது தொண்டர்களை கலக்கமடைய செய்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web