முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.மணிவண்ணன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்புடைய முக்கிய நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சோதனைகளில் சிக்கியுள்ள ஆவணங்கள் மற்றும் கணக்கு வழக்கு விவரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முறைகேடு தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணைக்குப் பின்னரே முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
