தமிழகத்தில் 10 நாட்களில் ₹178.78 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரி அறிக்கை!

 
தேர்தல் அதிகாரி அர்ச்சனா தேர்தல் அதிகாரி அர்ச்சனா

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் மார்ச் 24 வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், கணக்கில் வராத ரூ.178.78 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம் நேற்று (மார்ச் 24ம் தேதி) வரையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில் சிக்கியவை

பொருட்கள் 

மதிப்பு)

ரொக்கப் பணம்

₹34.64 கோடி

தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்

₹112.37 கோடி

மதுபானங்கள்

₹0.79 கோடி

போதைப்பொருள் மற்றும் இதர பொருட்கள்

₹6.76 கோடி

இலவசப் பொருட்கள் (பரிசுகள்)

₹24.22 கோடி

மொத்தம்

₹178.78 கோடி

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

மாநிலம் முழுவதும் 2,169 பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த 4.54 லட்சம் பொது இட விளம்பரங்களும், 2.56 லட்சம் தனியார் இட விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகைகள் பறிமுதல் சோதனை தேர்தல்

ரொக்கப் பணம் மட்டுமின்றி, GPay, PhonePe போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் 23 அமலாக்கத் துறைகளின் உதவியுடன் தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்துப் புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.