தமிழக மக்களுக்கு எச்சரிக்கை... வறண்ட வானிலையே நிலவும்!

 
வெயில்

 தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இன்றும்,  நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெயில் காலம்
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  சென்னை வானிலை மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இன்றும்,  நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!


இன்று முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களில்  2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35-36 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக  26-27 டிகிரி செல்சியசும் நிலவக் கூடும்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web