இன்றும், நாளையும் சென்னை உட்பட சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை விடுமுறை

 

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலை மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

School Student in Rain

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் புதுவை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

school rain

நாநாளும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. எனினும் உள் தமிழகப் பகுதிகளில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.