செப்டம்பர் 4 வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

குறிப்பாகச் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளது.

School Student in Rain

இந்த மழையின் காரணமாகத் தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.