சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும் விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இரவு  இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

School Student in Rain

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையின் காரணமாகப் பொதுமக்களும் பயணிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த எதிர்பாராத மழையின் மூலம் அப்பகுதிகளில் நிலவி வரும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

school rain

விவசாயிகள் மற்றும் மீனவர்களும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களின் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.