அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது மழை!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தில் நேற்றும், இன்றும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில் திடீரென தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்று சுழற்சி காரணமாக  இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை முதலே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் பல பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. தென்காசி நகர் பகுதி, குத்துக்கல்வலசை, கனகபிள்ளை வலசை, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.  

மழை

மதுரை சோழவந்தான் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (வெள்ளிகிழமை) காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கடந்த 10 நாட்களாக நிலவிவந்த வெப்பத்தை தணித்து வருகிறது.

மழை

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலை சுற்றியுள்ள இடங்களிலும் இன்று காலை முதல் வெயிலுக்கு இதமாக மழை பெய்து வருகிறது. நீலகிரியில் நேற்றிரவு முதல் மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 12 செ.மீ மழைப்பொழிவு இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான உசிலம்பட்டி அருகே நேற்று இரவு சில இடங்களில் சாரல் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

தஞ்சாவூர், நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை. சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web