குடை எடுத்திட்டு போங்க... 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
பனி, மழை பனி, மழை

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பகல் 1 மணிக்குள் தமிழ்நாட்டின் 14 முக்கிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திடீரெனக் பெய்யக்கூடும் இந்த மழையால் பொதுமக்களுக்குக் கோடை வெப்பத்தில் இருந்து நல்ல குளுமையான சூழல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி கோவை, தருமபுரி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மதியத்திற்குள் மழை பெய்யக்கூடும். மேலும் தென் தமிழகப் பகுதிகளான கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.

மழை அலர்ட்  மஞ்சள் கனமழை

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மதிய நேரத்திற்குள் மழைக்கான சூழல் நிலவுகிறது. எனவே இந்த 14 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களின் மதிய நேரப் பயணங்களின் போது தேவையான பாதுகாப்பு எச்சரிக்கைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மழையின் காரணமாகச் சில இடங்களில் குளிர்ந்த காற்று வீசக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறையும்.