இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை !
ஆந்திராவின் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள வான் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் மற்றும் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாகத் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களால், தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய 5 முக்கிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 23ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள
