விநாயகர் சதுர்த்தி நாளில் தமிழகத்தில் மழை... எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு? பத்திரம் மக்களே!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று சென்னைப் பகுதி மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு மாவட்டங்கள் மற்றும் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.

கன மழை

அதே போன்று தர்மபுரி, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் அதனை ஒட்டிய ஒருசில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவுக் நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.