சாலைப் பணியில் மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி; 5 பேர் காயம்!

 
மின்சாரம்

 

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியின்போது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜுன்ஜுனு மாவட்டம் சாபோலி கிராமத்தில் இருந்து கடம்குண்டு கோவிலுக்குச் செல்லும் சாலையை அமைக்கும் பணி கடந்த நவம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது சரளைக்கற்களை கலக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை வேறு இடத்துக்கு நகர்த்தியபோது, அதன் ஹைட்ராலிக் பகுதி மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jhunjhunu Electrocution Accident | Villagers Protest in Chhapoli Village

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.