பாஜக வேட்பாளர் தோல்வி: கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 50 தெருவிளக்குகள் அகற்றம்... பரபரப்பு வீடியோ!

 
தெரு விளக்கு

 

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் பீப்லு பஞ்சாயத்து சமிதிக்கு உட்பட்ட 2-வது வார்டு கிராமத்தில், பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே சுமார் 50 தெருவிளக்குகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லால் 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களில் வாகனத்தில் வந்த ஊழியர்கள் விளக்குகளை அகற்றியுள்ளனர்.

பாஜக வேட்பாளர் தோல்வியடைந்ததால்தான் தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அனுமதியின்றிப் பொருத்தப்பட்டிருந்ததாலேயே விளக்குகள் அகற்றப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.தங்களுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பாஜக எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது