மருந்துக் கடை ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.10,000 கோடி முடக்கம்... சொந்தப் பணம் ரூ.55000/- ம் எடுக்க முடியாமல் தவிப்பு

 
மருந்துக் கடை

 

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் முடக்கம் செய்யப்பட்டதாகக் காட்டிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது சொந்தப் பணமான ரூ.55 ஆயிரத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சமீர் கான், அங்குள்ள மருத்துவக் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வங்கிக் கணக்கின் இருப்பைச் சரிபார்த்தபோது, கணக்கில் பணம் பூஜ்ஜியமாகக் காட்டியுள்ளது.

Sikar Medical Worker Bank Account Error | ₹1 Lakh Crore Lien Blocked

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கணக்கு விவரங்களைப் பார்த்தபோது ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் தொகை முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அவரது கணக்கில் ஏற்கெனவே இருந்த ரூ.55 ஆயிரமும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடை உரிமையாளருடன் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகிய சமீர் கானிடம், வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர். வங்கியை அணுகியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் வங்கி நிர்வாகம் கோளாறைச் சரிசெய்து, அவரது உண்மையான கணக்கு இருப்பை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவந்தது.