திருமண ஊர்வலத்தில் சோகம்... நடனமாடிய மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்தின் போது, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து அந்த மணப்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
बहुत दुखद... जालोर के नई मोरसीम गांव में शादी समारोह के दौरान हादसा। बंदोली कार्यक्रम में डांस कर रही नवविवाहिता दीपिका की अचानक तबीयत बिगड़ी, अस्पताल ले जाते समय रास्ते में मौत। चार माह पहले हुई थी शादी, परिवार में शोक का माहौल।#Jalore #Rajasthan #BreakingNews #HumanStory… pic.twitter.com/J8n2X7MqRC
— Sambrat Chaturvedi | Rajasthan (@samjpr) April 28, 2026
உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மணப்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மிக உற்சாகமாகத் தொடங்கிய திருமண விழா, சில நிமிடங்களிலேயே ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியதை அந்தப் பகுதி மக்களால் நம்பவே முடியவில்லை. மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணக்கோலத்தில் இருந்த பெண்ணின் இந்தத் துயரமான முடிவு, மணமகன் மற்றும் இரு வீட்டார் குடும்பத்தினரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண வாழ்வைத் தொடங்க வேண்டிய ஒரு இளம்பெண், தனது திருமண நா அன்றே உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
