ஆர்.எஸ். ராஜேஷ் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் !

 
ராஜேஷ்

அதிமுகவின் வடசென்னை வட கிழக்கு மாவட்டச் செயலாளரும், 2026 ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் தவெக-வில் தொடர்ந்து இணைந்து வருவது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சி கொடி

எதிர்வரும் தேர்தல்களை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் சூழலில், இந்த அதிரடித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பலத்த கவனத்தைப் பெற்றுள்ளது. மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தவெக பக்கம் சாய்வது அந்த இயக்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

 தவெக என்றாலே இப்ப எல்லோருக்கும் பயம் தான்... புஸ்ஸி ஆனந்த் அட்ராசிட்டி !  

ஆர்.எஸ். ராஜேத்துடன் ஏராளமான தொண்டர்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதால் சென்னையில் தவெகவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.கட்சியில் இணைந்த அவர்களுக்குப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் உற்சாகத்துடன் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் கட்சி வளர்ச்சிப் பணிகளில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பாடுபட வேண்டும் எனத் தலைவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.