ரஜினி குடும்பத்துடன் ஹோலி கொண்டாட்டம் ... வைரலாகும் புகைப்படங்கள்!

 
ரஜினி
 நேற்று உலகம் முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (“வசந்தகாலத் திருவிழா”) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ரஜினி


ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தலங்களை விரும்புபவர்களால் நிரம்பி வழியும் துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.

ரஜினி
கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகலாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். சென்னையைப்பொறுத்தவரை வட இந்தியர்கள் அதிகமாக வாழும் செளகார் பேட்டை உள்ளிட்ட வடசென்னையில் மிகப்பிரபலம் பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை திருவிழா முடிவடையும். இந்நிலையில் நேற்றைய தினம் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இவ்விழாவினை கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web