சோகத்தில் திரையுலகம்.... ரஜினி பட தயாரிப்பாளர் தற்கொலை!

 
சௌத்ரி


பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர்  கே.பி.சௌத்ரி. இவர்  கோவாவில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடும் பொருளாதார நெருக்கடி, மன உளைச்சல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர்  தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி. இவருக்கு வயது 44 .  

சௌத்ரி

இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  புனேவில் உள்ள இந்திய விமானப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.  அந்த வேலையை விட்டுவிட்டு, 2016ம் ஆண்டு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்து  ரஜினியின் 'கபாலி' படத்தின் தெலுங்கு வெர்ஷனை தயாரித்தார். தொடர்ந்து, 'சர்தார் கப்பர்சிங்' மற்றும் 'சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு' ஆகிய தெலுங்கு படங்கள் மற்றும், 'கணிதன்' தமிழ் படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தார்.

ரஜினி


2023ல்  93 கிராம் கோக்கைன் வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். பொருளாதார பிரச்சினை, மன உளைச்சலால் தவித்து வந்த சௌத்ரி கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web