ரஜினி பட நடிகை சோனாக்‌ஷிக்கு திருமணம்... காதலரை கரம் பிடிக்கிறார்!

 
ரஜினி பட நடிகை சோனாக்‌ஷிக்கு திருமணம்... காதலரை கரம் பிடிக்கிறார்!

பிரபல திரைப்பட நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது நெடுநாள் காதலரைத் திருமணம் செய்து கொள்ள தயாராகி இருக்கிறார். 

இந்தியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’, ‘தபாங்2’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தமிழிலும் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். 

37 வயதாகும் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, நடிகர் ஜாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் ஜோடியாக வெளியிடங்களில் சுற்றித் திரிந்த புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஜோடிக்கு ஜூன் 23ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘வந்ததிகள் எல்லாம் உண்மை தான்’ என்ற கேப்ஷனுடன் மேகசினின் கவர் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இவர்களது திருமண பத்திரிக்கை பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

From around the web