தனக்கென தனி பாணியை உருவாக்கியவர்... தேவா குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ!
Oct 17, 2026, 16:00 IST
இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நண்பர் தேவா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், அவருடனான சமீபத்திய சந்திப்பின்போது நடந்த உரையாடலையும் நினைவு கூர்ந்துள்ளார்.
சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தேவாவைச் சந்தித்தபோது, “இன்றைய இளைஞர்களும் என் பாடல்களை ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தச் சந்தோஷத்தோடு இன்னும் 10, 15 ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும்” என்று தேவா கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சியுடனேயே இறைவன் அவரைத் தன்னிடம் அழைத்துக்கொண்டதாகக் கூறிய ரஜினி, நண்பரின் மறைவை நினைத்து உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
