நிராகரித்த ரஜினி... கைவிட்ட ரஹ்மான்... ‘வேட்டையன்’ பாடல்கள் சரியில்லை என்கிறாரா வைரமுத்து?!

 
நிராகரித்த ரஜினி... கைவிட்ட ரஹ்மான்... ‘வேட்டையன்’ பாடல்கள் சரியில்லை என்கிறாரா வைரமுத்து?!

மீ டூ விவகாரத்தில் வைரமுத்துவின் பெயர் அடிபடத் தொடங்கியதுமே தமிழ் திரையுலகில் அந்த எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கிளம்பியது. அதன்பின்னர் வைரமுத்துவுக்கு வழக்கமாக பாடல் வாய்ப்பு தரும் பெரிய இயக்குநர்கள் நிராகரித்து வருகிறார்கள் என்கிற பேச்சு கிளம்பியது. ஷங்கரின் படங்கள், ரஹ்மானின் படங்கள், மணிரத்னத்தின் படங்கள், ரஜினி, கமல் படங்கள் என்று வைரமுத்துவுக்கு பிரத்யேகமாகவே வாய்ப்புகளாக வருகிற படங்களில் அவரது பங்களிப்பு இல்லாமல் இருந்தது. 

நேற்று சென்னையில் ‘வேட்டையன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் ‘பாட்ஷா’ படத்திற்கு பாடல்கள் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து. 

எப்போதுமே சூசகமாக குறைச் சொல்கிற பழக்கம் வைரமுத்துவுக்கு வழக்கம். பாராட்டுவது போல எள்ளி நகையாடல் என்பது அவரது வழக்கம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அவருடைய பதிவில், ‘பாட்ஷா’ படத்தின் வெற்றிக்கு பாடல்களுக்கும் பங்குண்டு என்று பதிவிட்டிருக்கிறார். 

நிராகரித்த ரஜினி... கைவிட்ட ரஹ்மான்... ‘வேட்டையன்’ பாடல்கள் சரியில்லை என்கிறாரா வைரமுத்து?!

இந்த நேரத்தில் இந்த பதிவு அத்தனை முக்கியமா? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் புது படத்தின் இசைவெயீடு நடந்திருக்கிற நிலையில், அவர் எழுதிய ஹிட் படத்தின் பாடல்கள் குறித்து பதிவிட்டு சிலாகிப்பது யாரைச் சீண்டிப் பார்ப்பதற்காக? வழக்கம் போல பாட்டைக் கேட்டீங்களா... நல்லாயில்லை என்று உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொள்ளுங்க” என்று ரஜினி ரசிகர்கள் கத்து பதிவிட்டு வருகின்றனர்.

கவி பேரரசு வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,  ‘பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள்.

‘உங்களுக்கு எவ்வளவு  சம்பளம்’ என்றார்  தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.

‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர்,  நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார்: ‘பாடலாசிரியருக்கு

இவ்வளவு பணமா?  நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு  500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார். 

‘இப்போது நான் வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்;  அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன்.

வேட்டையன்

‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார். எல்லாப் பாடலும்  எழுதி முடித்தவுடன், நான் கேட்டதில் 5ஆயிரம்  குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார்; நான் பேசாமல் பெற்றுக் கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’. படத்தின் வெற்றியில்  பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.

ஒருநாள்  நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் பக்கம் சென்ற கார் ஒன்று,  என்னைக் கண்டு நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர், ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்எம்வீ ஐயா உங்களை அலுவலகம் வந்து போகச் சொன்னார்’ என்றார். சென்றேன்.

ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார். ‘என்ன இது?’ என்றேன். ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார்.

‘நன்றி’ என்று பெற்றுக் கொண்டேன். தயாரிப்பாளர் குறைத்தாலும்  தமிழ் விடாது என்று கருதிக் கொண்டேன்.

அந்தப் பணம் 5,000 டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா  நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவிடலுக்கு தான் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள். உங்கள் அனுபவங்களை பகிர உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.  ஆனால் வளர்கிற இளைஞர்கள் எழுதியிருக்கும் போது, உங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று குமைந்து போகாதீர்கள்... அதை தமிழும் அனுமதிக்காது” என்று கருத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web