கேரள ஆளுநராகிறாரா ரஜினிகாந்த்... தமிழகத்திற்கும் பொறுப்பு என தகவல்!

 
ரஜினிகாந்த்

 நடிகர் ரஜினிகாந்த் கேரள ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்குத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் முன்னணி ஊடகங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி மர்ம நபர்களால் திட்டமிடப்பட்டுப் பரப்பப்பட்ட இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் புனையப்பட்டவை எனத் தகவல் சரிபார்ப்பு நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு தரப்பிலிருந்தோ அல்லது நடிகர் ரஜினிகாந்தின் தரப்பிலிருந்தோ இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்து வருபவரே தமிழக ஆளுநருக்கான கூடுதல் பொறுப்பையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.