பழனியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.... குவிந்த ரசிகர்கள் !

 
ஐஸ்வர்யா
 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் ,திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்தார். ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார்.

பழனி
கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் அவருக்கு பழனி தல வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது பின்னர் ரோப்கார் வழியாக கீழே இறங்கிய அவருடன் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பழனி
கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார் நேற்று பழனி முருகப் பெருமானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web