ராமர் பாதத்துடன் ஊர்வலம்... உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

 
 ராமர் பாதம்

ராமர் பாதத்துக்கு பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில பாரத இந்து மகாசபாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், கும்பாபிஷேக விழாவையும் கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோயிலில் ராமர் பாதங்களுக்கு பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பூஜிக்கப்படும் பாதங்களை ராமேசுவரத்திற்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்த பின்னர், ரயில் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா மற்றும் வாகன ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ​​மனுதாரர் ஏற்கனவே அரசியல் உள்நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக காவல் துறை குற்றம் சாட்டியது.

உயர்நீதிமன்றம்

அவர் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும், 2 ஆண்டுகளுக்கு முன் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ததாக மனுதாரர் மீது புகார் உள்ளதால், இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. போலீசாரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராமர் பாதம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா