147 கிலோ எடை, 522 தங்கத் தகடுகளில் ராம சரிதம்... அயோத்தி கோவிலுக்கு காணிக்கை !

 
ராம சரிதம்

 உத்தப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம் லல்லா கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் இக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீராமரை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகின்றனர். அமைதியான பாதுகாப்பான முறையில் பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அதே போல்ராம பக்தர்கள் பல்வேறு வகையான பொருட்களை ராமருக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

 அயோத்தி

அந்த வகையில்  ராமர் துளசிதாசர் எழுதிய ஸ்ரீராம் சரிதம் என்ற ராமாயண கதையை 522 தங்க தகடுகளில் எழுதி உள்ளார் உம்மடி பங்காரு நகைக்கடையின் நிர்வாக பங்குதாரர் அமேந்திரன் உம்மிடி. இந்த 522 தங்க தகடுகளையும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மிகப்பெரிய  ராம பக்தரான லஷ்மி நாராயணன்   இராமாயண கதையை காலம் கடந்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பற்பல நற்காரியங்களை செய்து வருகிறார். தனது விருப்பத்தை தெரிவித்து இருந்த நிலையில் தீவிரமான ஆராய்ந்து தாமரை தகட்டில் தங்க முலாம் பூசி ராமாயண கதையின் எழுத்துக்களை பொறிக்க முடிவு செய்ததாக  கூறியுள்ளார்.

 

ayoothi
 ஒவ்வொரு தகடும் ஒரு மில்லி மீட்டர் தடிமன் உள்ளது.  இந்த தகட்டின் இரண்டு பக்கத்திலும் ராம சரிதம் எழுத்துக்களாகப்  பொறிக்கப்பட்டுள்ளது . 147 கிலோ எடை கொண்ட ராமாயண கதையை கொண்ட தகடுகளை செய்ய சுமார் 8 மாதங்கள் ஆனதாக கூறியுள்ளார் உம்மிடி. ராமாயணத்தை சுமந்து செல்லும் இந்த தங்க தகடுகள் ஏப்ரல்  8ம் தேதி அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன்  ராமநவமி நாளில்  கோவில் கருவறையில்  ராம பக்தர் லட்சுமி நாராயணன் இதை கோவிலுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web