உலக அளவில் ரூ.1,500 கோடி வசூல்… ‘ராமாயணா’ புதிய சாதனை
Nov 19, 2026, 19:14 IST
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வசூலில் அடுத்தடுத்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படம், வெளியான 14 நாட்களிலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம், உலகளவில் இந்த வசூல் மைல்கல்லை மிக வேகமாக எட்டிய இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ‘துரந்தர் 2’ திரைப்படம் 16 நாட்களில் ரூ.1,500 கோடி வசூலைக் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘ராமாயணா’ முறியடித்துள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்த இலக்கை எட்ட 17 நாட்களும், ‘பாகுபலி 2’ திரைப்படம் 20 நாட்களும் எடுத்துக்கொண்டன.மேலும், இந்தியாவில் மட்டும் ரூ.1,000 கோடி மொத்த வசூலைக் கடந்த படங்களின் பட்டியலிலும் ‘ராமாயணா’ இடம்பிடித்துள்ளது.
