‘ராமாயணா’ படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற ஜியோ ஹாட்ஸ்டார்!

 
ராமாயணம்

 

நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம், நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். சன்னி தியோல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Ramayana OTT Release on JioHotstar Confirmed – Digital Rights

திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தனியாகக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகவுள்ளது. வழக்கமான சந்தா மூலம் இலவசமாகப் பார்க்கும் வகையில் அல்லாமல், படத்தைப் பார்ப்பதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.எனினும், ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் பார்வைக் கட்டணம் குறித்த விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர்.