ராமேஸ்வரத்தில் பெண் சிசு உயிருடன் புதைத்து கொலையா? தந்தை உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை

 
ராமேஸ்வரம்

 

ராமேஸ்வரத்தில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்துக் கொலை செய்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தந்தை உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

ராமேஸ்வரம் அருகே சம்பை பகுதியைச் சேர்ந்தவர் லோகநந்தினி. இவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அப்போது, பிறந்த பெண் குழந்தை புதைக்கப்பட்ட விவகாரம் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லோகநந்தினியின் கணவர் நாகபாண்டி (30), அவரது மாமனார் மற்றும் நாத்தனார் ஆகிய மூவரையும் பிடித்த போலீசார், குழந்தை புதைக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட புகார் தொடர்பான உண்மை விவரங்கள் போலீஸ் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.