தொடரும் அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! விசைப்படகும் பறிமுதல்

 
மீனவர்கள்

 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவக் குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களைச் சுற்றிவளைத்தனர்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இதையடுத்து படகில் இருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், மீன்பிடிக்கப் பயன்படுத்திய அவர்களுக்குச் சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

இதுகுறித்த தகவல் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவமும் மீனவ மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் விரைவாக மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.