மதுபானக் கடைக்குள் புகுந்த குரங்கு! பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு தூங்கிய காட்சி

 
குரங்கு

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மதுபானக் கடைக்குள் புகுந்த பெண் குரங்கு ஒன்று, அங்கிருந்த மதுபான பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு கடைக்குள்ளேயே படுத்து உறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.ராஞ்சி நகரின் ஓரமாஞ்சி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்குள் யாரும் இல்லாத நேரத்தில் பெண் குரங்கு ஒன்று புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கு சுற்றித் திரிந்த அந்த குரங்கு, கடையில் இருந்த மதுபான பாட்டில் ஒன்றை எடுத்துக் குடித்துள்ளது.

மதுபானத்தை குடித்த பிறகு கடைக்குள்ளேயே அட்டைப் பெட்டி மீது படுத்து அந்த குரங்கு உறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் காலையில் கடையைத் திறக்க வந்த ஊழியர்கள், குரங்கு கடைக்குள் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து கடையை சோதனை செய்தபோது, மதுபான பாட்டில் ஒன்று காலியாக இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் குரங்கு அந்த பாட்டிலை எடுத்து மதுபானத்தை குடித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குரங்கு கடைக்குள் படுத்து உறங்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் குரங்கை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ராஞ்சியில் நடைபெற்ற இந்த வித்தியாசமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.