கன்டெய்னருடன் கடலில் விழுந்து ராணிப்பேட்டை வாலிபர் பலி; சிங்கப்பூரில் துயரம்!

 
கண்டெய்னர்

சிங்கப்பூர் துறைமுகத்தில் நேர்ந்த விபத்தில் கன்டெய்னருடன் கடலில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

கடந்த 22-ஆம் தேதி சிங்கப்பூர் துறைமுகத்தில் நடைபெற்ற விபத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பவர் கன்டெய்னருடன் தவறி கடலில் விழுந்து படுகாயமடைந்தார். இந்த விபத்தின்போது அவருடன் கடலில் விழுந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வினோத், சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான நரசிங்கபுரத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.