கல் குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாப பலி... துணி துவைக்க சென்ற போது சோகம்!

 
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யாமினி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி யாமினி, தனது வீட்டின் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த கல் குவாரி குட்டை ஒன்றிற்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார்.

நீச்சல்

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி குட்டையின் ஆழமான பகுதிக்குள் விழுந்த அவர், தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குட்டையில் தீவிரமாகத் தேடி மாணவியை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இந்தச் சம்பவம், பூண்டி கிராம மக்கள் மற்றும் அவரது பள்ளி நண்பர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.