பரபரப்பு: காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய தாய்!
Sep 5, 2026, 11:50 IST
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் மீது, அப்பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளைத் திருமணம் செய்து வைக்குமாறு அந்த இளைஞர் கேட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய், அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை அந்த இளைஞர் மீது அள்ளி ஊற்றியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த தீக்காயம் அடைந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்து. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
