இன்று ரஞ்சி கோப்பை போட்டி தொடக்கம்... ரசிகர்களுக்கு இலவச அனுமதி!

 
சென்னை சேப்பாக்கம்

சென்னையில் இன்று ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைப்பெற உள்ள நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் டிக்கெட் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரஞ்சி கோப்பை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிப்ரவரி 9ம் தேதி தமிழ்நாடு, கர்நாடக கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி துவங்கி பிப்ரவரி 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சேப்பாக்கம் மைதானம்

போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மைதானத்தின் நான்காவது நுழைவாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். C, D, E  ஆகிய கேலரிகளில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web