அதிர்ச்சி... திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்.. 3 மாத கர்ப்பிணியான 11ம் வகுப்பு மாணவி!

 
கர்ப்பிணி பாலியல் பலாத்காரம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.தந்தை இறந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்கிறார். தற்போது பொதுத்தேர்வு நடப்பதால் மாணவி தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாய் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவியின் தாயார் விசாரித்த போது, அதே ஊரை சேர்ந்த ரகு என்பவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

இதற்கிடையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகத்துக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின், மாணவியை மீட்டு, வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ரகுவை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web