பகீர்... இளம்பெண்ணிடம் ரேபிடோ ஓட்டுனர் பாலியல் அத்துமீறல்...!

 
நடன சபாபதி

 
 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு பகுதியில் இருந்துமற்றொரு பகுதிக்கு செல்ல ரயில்கள், பேருந்துகள் என பொதுப்போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எதனை தேர்வு செய்தாலும் காலவிரயம் தான். இதனை குறைக்க தற்போது மாநகர் முழுவதும் ரேபிடோ பைக்குகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. 

ரேபிடோ
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் மார்ச் 19 ம் தேதி ரேபிடோ பைக் புக் செய்தார். அதன்படி  ரேபிடோ இருசக்கர வாகனம் மூலம் கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, ரேபிடோ பைக் ஓட்டுநர் நடனசபாபதி, அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு திடீரென அத்துமீறி நடந்துகொண்டார்.  உடனடியாக தப்பிச் செல்ல முயன்ற அந்த பெண்மணியை நடனசபாபதி நடந்து சென்றான். இந்த விஷயம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது மீறினால் திரும்பவும் நானே வந்து கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் . பதறிப்போன அந்த பெண், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


ரேபிடோ

இதனை தொடர்ந்து  பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட  பல பிரிவுகளில் அந்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்யப்பட்டது. குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர்  குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும்   நடனசபாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் அவரிடம் இருந்து மொபைல் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து  நடத்தப்பட்ட  விசாரணையில், நடனசபாபதி கடந்த 6 மாத காலமாக ரேபிடோ செல்போன் செயலி மூலம் பைக் டாக்சி இருசக்கர வாகனம் ஓட்டி தொழில் செய்து வருகிறார்.   கைது செய்யப்பட்ட நடனசபாபதி, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web