பெட்ரோல் இல்லன்னாலும் இறங்கமாட்டேன்.. ரேபிட்டோ பயணி அட்ராசிட்டி... வைரல் வீடியோ!
சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் அலுவலகம் செல்வோர் காலை நேரத்தில் ரேபிடோ, ஓலா போன்ற தனியார் ஆப்ஸ் மூலம் ஆட்டோ, கார் அல்லது பைக்கில் டாக்ஸியை முன்பதிவு செய்து அலுவலகம் செல்கின்றனர். இத்தகைய சேவைகள் சிறப்புத் தேவைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த மோசமான ரேபிடோ பயணம் தொடர்பான வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வைரலாக பரவி, பார்த்த பலரது மனதையும் உடைத்தது. வீடியோவில், ரேபிடோ டிரைவர் தனது பைக்கை தள்ளுகிறார். அவர் மட்டும் தனியே வண்டியை தள்ளியிருந்தால் பிரச்சனையே இருக்காது. அவர் தனது வாடிக்கையாளரை வண்டியின் பின்னால் வைத்து தள்ளுகிறார்.
A man booked two wheeler rental on rapido
— Eminent Woke (@WokePandemic) February 11, 2024
During the drive the bike ran of petrol
The passenger did not want to get down
And this is how the rapido rider continued the journey 😭
What is your opinion on this ? pic.twitter.com/N3HKVdzX0s
ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ரேபிடோவில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார். அவர் புக் செய்த பைக்கும் வந்துவிட்டது. அவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஆனால், எரிபொருள் இல்லாமல் பைக் பாதியில் நின்றது. இதனால் ராபிடோ பைக்கை ஓட்டி வந்தவர் கீழே இறங்கினார். மேலும் வாடிக்கையாளரை கீழே இறங்கி அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு நடந்து செல்லும்படி கூறினார்.
ஆனால், வாடிக்கையாளர் இறங்க மறுத்துவிட்டார். ராபிடோ டிரைவர் பலமுறை கேட்டும், டிரைவர் மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு வழியின்றி அவரை உட்கார வைத்து டிரைவர் பைக்கை தள்ளி சென்றார். அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர், அதை செல்போனில் வீடியோ எடுத்தார்.இந்த வீடியோவை அவர் x தளத்தில் பதிவிட்டதையடுத்து, அது பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது குறித்த விவாதமும் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் தவறு செய்துள்ளதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. வண்டியை முன்பதிவு செய்த பயனாளி, வண்டி நடுரோட்டில் நின்ற கோபத்தில் வண்டியை விட்டு இறங்காமல் இருந்திருக்கலாம்.ஓட்டுநர் தனது தவறை உணர்ந்து, பயனருடன் சண்டையிட விரும்பாமல் அவரை வண்டியில் தள்ளியிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
இது போன்ற சூழ்நிலையில், டிரைவர் தனது சவாரிக்கு முன்னதாக வண்டியின் நிலை குறித்தும், அதில் இருக்கும் எரிபொருள் அளவு குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டியது தான். ஆனால், அதற்கு தண்டனையாக இப்படி பைக்கில் அமர்ந்தபடி வாடிக்கையாளரை வைத்து தள்ளி செல்ல வற்புறுத்துவது சரியான அணுகுமுறையா என்பது கேள்விக்குறியே!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!