இன்று ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்... இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் இன்று பிப்ரவரி 26 நடைபெறவுள்ள நிலையில், இணையத்தில் அவர்களது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன. திரையுலகில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட இந்த ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மற்றும் அவர்கள் வைத்துள்ள விலையுயர்ந்த பொருட்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

விஜய் தேவரகொண்டாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ₹66 கோடி முதல் ₹70 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் மிக உயரிய இடமான ஜூபிலி ஹில்ஸில் சுமார் ₹15 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட மாளிகையில் இவர் வசித்து வருகிறார். திரைப்படங்கள் தவிர, 'ரவுடி' என்ற சொந்த ஆடை பிராண்ட் மற்றும் 'கிங் ஆஃப் தி ஹில்' (King of the Hill) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல கோடி வருவாய் ஈட்டுகிறார். இவரிடம் ₹85 லட்சம் மதிப்புள்ள வால்வோ XC90, பி.எம்.டபிள்யூ (BMW 5 Series), ரேஞ்ச் ரோவர் மற்றும் ஃபோர்டு மஸ்டாங் போன்ற சொகுசு கார்கள் உள்ளன. மேலும், இவருக்கு ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளது.

இந்திய அளவில் 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் ராஷ்மிகா, ஒரு படத்திற்குச் சுமார் ₹4 கோடி முதல் ₹5 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இவருக்குச் சொந்தமாகச் சொகுசு வீடுகள் உள்ளன. இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹45 கோடி முதல் ₹50 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட இந்த ஜோடி, இன்று தங்களது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பிரபலமான நட்சத்திரத் திருமணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இருவரின் மொத்த சொத்து மதிப்பையும் சேர்த்தால் அது சுமார் ₹110 கோடிக்கும் மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
