400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள்! நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
‘ரணபலி’ திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கத்தால், நடிகை ராஷ்மிகா மந்தனா 400 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அந்தக் குடும்பங்கள் 3 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை அவர் வழங்கியுள்ளார்.
12 வகையான அத்தியாவசியப் பொருட்கள்
அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இந்த மளிகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 400 குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவைகளுக்கு உதவும் வகையில் ராஷ்மிகா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
உதவி செய்வதற்கு பெரிய தொகையோ, அதிக முயற்சியோ தேவையில்லை என்று தெரிவித்துள்ள அவர், சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த மனிதநேயச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
