எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா - நாளை தொடக்க விழா!

 
எம்.எஸ்.சுப்புலட்சுமி ராஷ்மிகா மந்தனா

கர்நாடக இசை அரசி மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார்.

'எம்எஸ்- எ லேகசி ஆன் ஸ்கிரீன்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் கவு்தம் தின்னனூரி இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

ராஷ்மிகா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.