குரு சந்திர யோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு அடிக்கப் போகுது ஜாக்பாட்!

 
ராசி ராசி

இன்று 06.05.2026, புதன்கிழமை, சித்திரை மாதம் 23 ஆம் நாள். இன்றைய தினம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளதால், குருவும் சந்திரனும் சமசப்தம ஸ்தானத்தில் அமர்ந்து வலிமையான 'குரு சந்திர யோகத்தை' உருவாக்குகின்றனர். இந்த அபூர்வ யோகம் காரணமாகப் பல ராசிகளுக்குப் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளாகவும் அமைகிறது.

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

மேஷ ராசிக்குச் செலவுகள் அதிகரித்தாலும் வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். ரிஷப ராசிக்குச் சுக்கிரனின் ஆட்சியால் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டுத் தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். மிதுன ராசிக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும் என்பதால் நிதானம் தேவை. கடக ராசிக்குப் பெருமளவு செல்வம் சேரும் யோகம் உண்டு; அதனைச் சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. சிம்ம ராசிக்குத் தொழில் இடமாற்றம் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். கன்னி ராசியினருக்குப் புதிய வருமான யோசனைகள் தோன்றும்.

துலாம் ராசிக்கு மனதிற்குத் திருப்தியளிக்கும் சுபச் செலவுகள் உண்டாகும். விருச்சிக ராசிக்கு வேலையை மேம்படுத்த நிபுணர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பஞ்சாங்கத்தின்படி மேஷ மற்றும் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, பரணி நட்சத்திரங்களுக்குச் சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மரண யோகம் உள்ள நாள் என்பதால் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.