போன்லஸ் சிக்கன் கேட்டவருக்கு எலிக்கறி!! பகீர் வீடியோ!!

 
எலிக்கறி

சமீபகாலமாக உணவே விஷமாகி வருகிறது. முன்பெல்லாம் எங்கு சென்றாலும் கையோடு வீட்டு சாப்பாட்டை கொண்டு செல்வர்.  ஆனால் இப்பொதெல்லாம் சாப்பிடுவதற்காகவே வெளியில் செல்லும் கலாச்சாரம் மாறி வருகிறது.   உணவக உரிமையாளர்களின் அலட்சியங்கள் குற்றப்புகார்களால் சாப்பிடுபவர்கள் உடல் நிலை பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் விபரீதமாக கூட முடிவடைந்து விடுகிறது. அந்தவகையில் போன்லெஸ் சிக்கன் சாப்பிட ஹோட்டல் சென்றவருக்கு எலிக்கறியை பரிமாறியுள்ளனர்.


 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை  பாந்த்ரா பகுதியில் செயல்பட்டு வருகிறது   ’பஞ்சோ தா தாபா’ வின் கிளை இங்கே இரவு உணவை சாப்பிடுவதற்காக   அனுராக் திலீப் சிங்   தனது நண்பர் அமின் கான் உடன் சென்றிருந்தார். தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வரும் இருவரும்  அந்த உணவகத்தில் சிக்கன், மட்டன் என விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.   அனுராக் திலீப்பின் சிக்கன் க்ரேவியில், சிக்கன் துண்டு ஒன்று வாலுடன் இருப்பதாக கத்தி   கூச்சலிட்டார். அதனை  தனியாக எடுத்து பரிசோதித்ததில் அது ஒரு எலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அருகில் அமர்ந்து சாப்பிட்ட மற்ற வாடிக்கையாளர்களும் அதனை உறுதி செய்தனர்.  உடனடியாக   உணவகத்தின் ஊழியர்களை அழைத்து இருவரும் முறையிட்டனர். உணவகத்தின் நிர்வாகியிடம்  சிக்கன் என்ற பெயரில் எலிக்கறியை  பரிமாறியதற்கு பெரும் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் முற்றத் தொடங்கவே  அனுராக் திலீப் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   போலீஸார்  சுகாதாரத்துறைக்கு தெரிவித்து  ஆய்வு செய்தனர்.  வாடிக்கையாளர்கள் இருவரின் புகார் அடிப்படையில் உணவகத்தின் மேலாளர் மற்றும் சமையலர்   இருவரையும்  கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்கன் கிரேவி

மேலும்  எலிக்கறி புகாருக்கு ஆளான சிக்கன் உணவை பரிசோதனைக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு  வைரலாகி வருகின்றன.  உணவகத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்   “ நண்பர்கள் இருவரும் முழு போதையில் இருந்ததால் உணவகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றனர்.  இதனால்  22 வருடங்களுக்கும் மேலாக புகாரின்றி செயல்படும் உணவகத்தின் நற்பெயருக்கு குந்தகம் விளைந்துள்ளனர். இருவரும்  உணவக நிர்வாகியை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க முயற்சி செய்தனர்” என விளக்கம் அளித்துள்ளார். 

From around the web