பெற்றோர்களே உஷார்... டால்மோத் சிப்ஸ் பாக்கெட்டில் குட்டி எலி... !
கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் டால்மோத் பாக்கெட்டுக்குள் இறந்த குட்டி எலி இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ராஜ்பூர் நகரில் எண்பது ரூபாய் மதிப்புள்ள பாக்கெட்டை வாங்கியபோது இந்த அதிர்ச்சி காட்சி தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
ब्रांडेड नमकीन के पैकेट में मिला चूहे का मरा बच्चा 😱
— Adesh_26 (@SonOfBharat_88) August 20, 2026
कानपुर देहात के राजपुर कस्बे में एक चौंकाने वाली घटना सामने आई है जहाँ, नई बस्ती निवासी जावेद खान ने मुगल सड़क किनारे स्थित एक किराना दुकान से बच्चों के लिए ₹80 का दालमोंठ पैकेट खरीदा।
दुकान के सामने बैठकर जैसे ही उन्होंने… pic.twitter.com/Z1dQsPrgTC
ராஜ்பூர் நகரின் முகல் ரோடு பகுதியில் உள்ள மளிகைக் கடையில், நை பஸ்தியைச் சேர்ந்த ஜாவேத் கான் தனது குழந்தைகளுக்காக டால்மோத் பாக்கெட்டை வாங்கியுள்ளார். கடையின் முன்பாக அமர்ந்து பாக்கெட்டை திறந்து சாப்பிடத் தொடங்கியபோது, அதற்குள் இறந்த குட்டி எலி இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பாக்கெட்டை சோதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் இத்தகைய பொருள் இருந்ததாக கூறப்படுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த ஜாவேத் கான், சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
