பிப்ரவரி 16ல் ரத சப்தமி... ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்!

 
ரத சப்தமி

இம்மாதம் 16ம் தேதி ரத சப்தமி விழா நடைப்பெற உள்ளதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ரத சப்தமி விழாவை முன்னிட்டு திருமலை மின் விளக்குகளால் இப்போதில் இருந்தே ஜொலிக்கிறது. திருமலையின் மாட வீதிகள் அனைத்தும் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை ஈர்த்து வருகிறது.

ரதசப்தமி நாளில் காலை துவங்கி இரவு வரை திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காட்சியளிப்பார். இந்த ஒரு நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ஆகையால் இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றும் பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

ரத சப்தமி

ரத சப்தமியன்று காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார். அன்று காலை 6.40 மணிக்கு சூரிய உதயம் ஆகும். அதன் பிறகு காலை 9 மணி முதல் 10 வரை சிறிய சேஷ வாகன சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்தை ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 3 வரை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

ரத சப்தமியை முன்னிட்டுகோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை ஆகியவை தனியாக செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web