திருப்பதியில் ரதசப்தமி... பாதுகாப்பு பணியில் 1,250 போலீஸார் !

 
திருப்பதி


திருப்பதி -திருமலையில் அன்னமைய்யா பவனில்  திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இந்த விழாவுக்கு  2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

இதனையொட்டி, 4ம் தேதி அஷ்டதள பாத பத்மாராதனை, திருக்கல்யாண சேவை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமகன்கள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வழங்கப்படமாட்டாது. இதேபோல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் பெறமாட்டாது. பாதுகாப்பு பணிக்கு 1,000 தேவஸ்தான கண்காணிப்பு படையினர், 1,250 காவல்துறையினர்  நியமனம் செய்யப்படுகின்றனர்.

திருப்பதி

மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து மோர், குடிநீர், சிற்றுண்டி, உணவு பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சௌத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அறங்காவலர் குழு கூட்டத்தை தொடர்ந்து பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமள ராவ் உட்பட உயர் அதிகாரிகள் ரதசப்தமிக்கான ஏற்பாடுகளை மாடவீதிகளில் நேரில் பார்வையிட்டனர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web