நடப்பாண்டில் ரத சப்தமி நாள், நீராட வேண்டிய நேரம், வழிபாடு பலன்கள்!

 
ரத சப்தமி

 ஒவ்வொரு வருடமும் ரத சப்தமி மாசி மாசத்தில் உள்ள சுக்லபக்ஷ சப்தமி திதியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்நாளில் ஆலயங்களில் சூரிய பகவானுக்கு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.   ரதசப்தமியில்  சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்குவார்கள். அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வதால்   நீண்ட ஆயுள், நீடித்த செல்வம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் செழிப்பு என சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.   நடப்பாண்டில் ரத சப்தமி   மாசி மாதத்தின் சுக்ல பக்ஷ சப்தமி திதி பஞ்சாங்கத்தின்படி பிப்ரவரி 15 வியாழக்கிழமை  காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணிக்குள் தொடங்கி   பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை காலை 08:54 மணிக்குள்  முடிவடைகிறது. இதனையடுத்து  பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை உதயத்தில்  ரதசப்தமியை அனுசரிக்கலாம்.   
நீராட உகந்த நேரம் : பிப்ரவரி 16   வெள்ளிக்கிழமை  காலை 05:17 முதல் 6:59 வரை  தலையில் எருக்கம் இலைகளை வைத்து  குளித்த உடன் தூய ஆடை அணிந்து  சூரிய வழிபாடு செய்ய வேண்டும்.   
 

மகாபாரதத்தில் பீஷ்மரின் கதை நம் அனைவருக்கும் தெரியும். அவருக்குச் செய்யும் மரியாதை தான் ரத சப்தமி. வருடத்திற்கொரு முறை இந்த நாளை மிஸ் பண்ணாதீங்க. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் வளர்பிறை சப்தமியன்று வருவதைத் தான் ரத சப்தமி என்கிறோம். சூரிய பகவானுக்குரிய விரத நாள் இந்த ரத சப்தமி. இந்த நாளில் புண்ணிய ஆறுகள் மற்றும் தீர்த்தங்களில் புனித நீராடி சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவான் தமது தேரில் 7 குதிரைகளை பூட்டி இருப்பதை எல்லாம் அறிவீர்கள் தானே? அதைப் போல விரைந்தோடி செல்வங்கள் உங்களிடம் சேரும். சூரியனின் தகதகப்பைப் போல் ஆரோக்கியம் மேம்படும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். தேவையற்ற செலவுகள், குறிப்பாக மருத்துவ செலவுகள் குறையும்.

ரத சப்தமி
7 எருக்கம் இலைகளை எடுத்து  தலையில் 1, இரு கண்களில் தலா 1, தோள்பட்டைகளில் 2,  கால்களில் 2 வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் மட்டும் ஆண்கள் அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வளமான வாழ்வு பெறலாம். மேலும் இந்த நாளில் செய்யப்படும் தர்மம்  பல மடங்கு புண்ணியத்தை பெறும். இந்நாளில் தொடங்கப்படும்  தொழிலில்  முன்னேற்றம் பெறலாம்.

ரத சப்தமி

கணவனை இழந்தவர்கள் முறைப்படி பிரார்த்தனை செய்து இந்த விரதம் அனுஷ்டிக்க, இனி வரும் பிறவிகளில் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம் என்கின்றன புராணங்கள்.
சூரிய உதய நேரத்தில் எருக்க இலையை தலையில் வைத்துக் குளித்து விரதம் இருந்தால் செல்வந்தர் ஆகலாம்  என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை

From around the web