ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்!! அதிரடி அறிவிப்பு!!

 
ரேஷன்

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் ரூ1,000  உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது.  ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15  முதல் வழங்கப்படும் என  அறிவித்தார்.  
இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன.

உரிமை தொகை

குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

மகளிர் உரிமை தொகை

முதற்கட்டமாக 20,765 ரேஷன்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை விண்ணப்பப்‌ பதிவு முகாம்கள்‌ நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நியாய விலைக்‌ கடை பணியாளர்கள்‌  வீடு வீடாக விண்ணப்பங்களையும்‌, டோக்கன்களையும்‌ விநியோகம்‌ செய்து வருகின்றனர்‌. இந்நிலையில் தமிழகத்தில்   அனைத்து ரேஷன் கடைகளும்   ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று உணவுத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்கு ஈடாக ஆகஸ்ட் 26ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web